அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 01
நான் கருவில் இருக்கும்போதே என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடங்கிவிட்டது போல. நான் கருவில் இருக்கும் பொழுதே ஆண் குழந்தை என்று தெரிந்ததும் என் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதனால் அப்பொழுது கருவில் கலைத்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அப்படி நினைப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்
என் அப்பா, வீட்டின் மேல் சிறிது கூட அக்கறை இல்லாமல் செயல்பட கூடியவர் , ஊரெங்கும் கடன் வாங்கி அதில் நாட்களை கழிக்க கூடியவர். அதனால் எங்கள் குடும்பம் தரக்குறைவான பேச்சுக்கு ஆளானது.
என் அப்பாவின் செயலால் என் அம்மா ஆண்களையே ஒட்டுமொத்தமாக வெறுத்து விட்டார். மேலும் கருவில் இருந்த நானும் ஆண் என்பதால் என்னையும் வெறுத்து கலைப்பதற்கு முடிவெடுத்தாள். ஆனால் என்னுடைய நல்ல நேரம் கலைக்கக்கூடிய காலத்தை நான் கடந்து விட்டதால் வேறு வழி இலலாமல்
இந்த உலகிற்கு அறிமுகம் ஆனேன்.
எனக்கு ஒரு அக்கா இருந்தாள். நான் பிறக்கும் போது எனது அக்காவிற்கு வயது 3 . நாட்கள் செல்ல செல்ல வீட்டிற்கு பணத் தேவை அதிகமானது. அப்போதும் எங்கள் அப்பாவின் கவனம் எங்கள் குடும்பத்தின் மேல் திரும்பவில்லை. எங்கள் அம்மாவின் கடின உழைப்பில் எங்கள் வாழ்க்கை பயணம் தொடங்கியது.
வருடங்கள் பல கடந்தது ஆனால் எங்கள் வீட்டின் நிலைமையில் சிறிது மாற்றம் கூட இல்லை. ஒவ்வொரு நாளும் பல சண்டைகள் உடனே தொடங்கும் முடியும். ஒரு சில வருடங்களில் என்னையும் என் அக்காவையும் வீட்டுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
எனக்கு சிறு வயது முதலே வழக்கத்திற்கு மாறாக எதையேனும் பார்த்தாள் அதை பார்த்துக்கொண்டே இருப்பேன் அதைப் பற்றித் தெரிந்து கொள்வேன். உதாரணத்திற்கு நான் குழந்தையாக இருந்த காலத்தில் எனது ஊரில் அனைவரும் சைக்கிள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர் . அப்போது புதிதாக ஒரு பைக் வந்தால் என் பார்வை அதன் மேலிருந்து சிறிதுகூட சிதறாது பின்னாடியே ஓடிச்சென்று அது போகும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன் தொட்டு ரசிப்பேன். அந்த நொடி நாம் அந்த வண்டியை ஓட்டினால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மிதப்பேன்.
எங்கள் வீட்டில் நெசவு தொழில் செய்து கொண்டிருந்தனர். பள்ளி சென்று வீட்டுக்கு வந்த பிறகு, என் அம்மா நெசவு செய்வதற்கு நான் கட்டாயம் உதவி செய்ய வேண்டும். எனக்கு நெசவு தொழில் செய்யப் பிடிக்காது. ஆனால் என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நான் அங்கு வேலை செய்தே ஆக வேண்டும் . வேறு வழியில்லாமல் நான் நெசவுத் செய்ய உதவி செய்தாலும் என் கவனம் முழுவதும் விளையாட்டின் மேல் மட்டுமே இருக்கும்.
நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது , என் நண்பன் ஒருவன் பள்ளியில் Zooming lens Scale பயன்படுத்திக்கொண்டு இருந்தான். அதை இரண்டு மூன்று முறை பார்த்ததும் என் கவனம் அதன் மேல் திரும்பியது. நான் பார்ப்பதற்கு அவனிடம் கேட்டபோது தர மறுத்தான். அது எப்படி உள்ளது என்று பார்க்கும் ஆர்வம் என்னை விட்டுப் போகவே இல்லை. என் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பொதுவாக நான் எது கேட்டாலும் கிடைக்காது. எனக்கு அந்த Scale ன் மேலிருந்த ஆறும் குறையாததால் என் வீட்டில் கேட்டேன். அதற்கு என் வீட்டில் எனக்கு கிடைத்த பதில் உன்னை பள்ளிக்கு அனுப்புவதே பெரிய விஷயம் இதில் உனக்கு இது வேறயா. நமக்கு இதுவெல்லாம் தேவையில்லை இருக்கிறதை வைத்துக்கொண்டு பள்ளிக்கு போயிட்டு வா என்று திட்டி அனுப்பிட்டனர். என்னுடைய சிந்தனை முழுவதும் அந்த Scale மேலயே இருந்தது.
நான் எந்தக் கடையில் உள்ளது என்று தேடி விசாரித்து அதன் விலையை தெரிந்து கொண்டேன். பத்து ரூபாய் தேவைப்பட்டது. நான் அடிக்கடி எனது தெருவில் உள்ள ஒரு சில வீட்டில் வேலை செய்ய செல்வேன். அப்போது ஒரு வீட்டில் இருபது ரூபாய் பணம் இருந்தது . அதை நான் பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் எடுத்து கடைக்குச் சென்று Scale வாங்கிக் கொண்டேன். ஆனால் நான் திருடியது நான் வேலை செய்த வீட்டில் தெரிந்து விட்டது. மேலும் அதை அந்த வீட்டிலிருந்து என் அம்மாவிடம் சொல்லிவிட்டனர். ஏற்கனவே என் அம்மாவிற்கு என்னைக் கண்டால் பிடிக்காது, உன் அப்பா மாதிரி நீ இருக்கக்கூடாது என்று தினமும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த சம்பவம் என் அம்மாவுக்கு தெரிஞ்சதும் செம கோவம் ஆயிட்டாங்க.
என்னை வீட்டுக்குள்ள தரதரவென்று இழுத்துப் போய் , நீயும் உங்க அப்பா மாதிரி தான் இருக்க இனி நீ இருக்கவே கூடாது செத்துடு செத்துடு என்று சொல்லியே அன்று முழுக்க அடி விழுந்தது. நான் பயத்தில் இனி பண்ண மாட்டேன் என்று சொல்லி அழுது புலம்பினேன். அதன்பிறகு நம்மால் முடிந்தால் வாங்கணும் இல்லையெனில் சும்மாவே இருக்க வேண்டும், திருடினால் அடி விழுகும் என்று எனக்கே எனக்கு உரைத்தது.
பிறகு பகலில் பள்ளிக்குச் செல்வது, மாலையில் நெசவு தொழில் செய்வது என வருடங்கள் கடந்தது. நான் ஐந்தாம் வகுப்பு செல்லும் செல்லும் காலத்தில் எங்கள் வீடு மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது.
மழை பெய்யும் பொழுதெல்லாம் வீட்டுக்குள் தண்ணி வரும் இதனால் நெசவு தொழில் பாதிக்கப்பட்டது வருமானம் ஈட்ட முடியவில்லை. நெசவுத் தொழிலில் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியாது , இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து உழைத்தால்தன் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். எப்படியாச்சும் வீட்டை கட்டிடலாம் என்று எங்க அம்மா எண்ணி வீடு கட்ட ஆரம்பித்தார். போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் வீட்டு பணியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதனால் வேலையாட்கள் வேலை செய்ய வர மறுத்தனர். நாட்கள் கடந்தும் போதிய வருமானம் இல்லாததால் பாதி கட்டிய வீட்டிலேயே குடியேறிவிடாடோம். என் உடல் மட்டும் தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் மனசு முழுவதும் விளையாட்டின் மேலேயே இருக்கும். எப்போதாவது தெரியாமல் போய் விளையாட விட்டு வருவேன் ஆனால் எளிமையாக வீட்டில் மாட்டிக் கொள்வேன். வழக்கம் போல நமக்கெல்லாம் விளையாட்டு தேவையா என்று சொல்லி அடி உதை தான் .
அடுத்து நான் ஆறாம் வகுப்பு செல்லும் போது என் நண்பர்கள் அனைவரும் மாலை நேரத்தில் Cycle ஒட்டி பழகுவார்கள். அதைப் பார்க்கும் பொழுது எனது கவனம் அதன் மேல் சென்றது.
அடுத்தடுத்து அவர்கள் அந்த சைக்கிளை ஓட்டுவதைப் பார்த்து மனம் அதை நோக்கிய சென்றது.
24 மணி நேரமும் மனதில் சைக்கிள் சைக்கிள் பற்றிய சிந்தனைதான். வழக்கம் போல வீட்டில் சொன்னேன் , வீட்டில் கிடைத்த பதிலும் வழக்கம் போல தான் நம்ம தகுதிக்கு அதெல்லாம் தேவையில்லை என்று சொல்லி முடிச்சுட்டாங்க. முன்ன நான் பண்ண மாதிரி வேலை செஞ்ச வீட்டில் ஒரு டைம் நிறைய பணம் பார்த்தேன்...
To be continued...............
Comments
Post a Comment