அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 03

வறுமையின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவித்த அந்த நொடிகள்.

வழக்கமாக நான் பள்ளிக்கு சைக்கிளில் தான் சென்று வருவேன். அனால் என் கெட்ட நேரம் போல என் சைக்கிள் பழுதாகி ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் அது பள்ளி திறந்த காலம் என்பதால் பேருந்து கான Pass கிடைக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால் என்னிடம் அதற்கான காசு இல்லை. என் வீட்டில் கேட்க மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால் பள்ளி திறப்பதற்கு முன்பே எங்கள் வீட்டில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினர். இந்த தருணத்தில் நான் பேருந்திற்கு காசு கேட்டால் அது என் பள்ளி வாழ்க்கையை கெடுத்து விடும் என்று நன்றாகப் புரிந்தது.


அதனால் நான் என் நண்பணிடம் சென்று நான் உன்னுடன் உன் சைக்கிளில் பள்ளிக்கு வருகிறேன் என்று கேட்டேன். அவனும் என்னை ஒரு வாரம் வரை அழைத்துச் சென்றான். ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளி முடிந்து அவனுடன் சைக்கிளில் செல்ல நான் அவனுக்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். எங்கேயும் அவனை காணவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் பள்ளியிலிருந்து அந்த சாலை வழியே செல்பவர் இடம் உதவி கேட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன். 



அடுத்த இரு தினங்களும் முந்தைய நாள் போல் என் நண்பனுக்காக நான் காத்திருந்தபோது அவனை காணவில்லை. அதன் பிறகு அவனிடம் போய் கேட்டேன் நான் உன்னுடன் வருகிறேன் என்று சொன்னேன் நீ ஏன் என்னை ஏன் கூப்பிட்டு போக வில்லை என்று கேட்டேன். இதற்கு எனக்கு கிடைத்த பதில் ராஜ் என்னை மன்னித்து விடு டா என் இன்னொரு நண்பன் தான் எனக்கு நிறைய தீனி பண்டம் வாங்கி தருகிறான்.‌ அவன் அவனை அழைத்து செல்லுமாறு என்னிடம் வற்புறுத்தினான் எனக்கு வேறு வழியில்லை அதனால் அவனை தான் அழைத்துச் செல்கிறேன்.நீ பேருந்தில் வந்து விடு என்று கூறி சென்றுவிட்டான். அந்த நொடி என் கண் கலங்கி விட்டது. 



என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இதனால் ஒரு சில நண்பர்கள் என்னிடம் இருந்து விலகியே செல்வார்கள் அல்லது என்னை வைத்து கேலி செய்து பேசுவார்கள். இது என்னை மிகவும் பாதித்தது அதனால் நான் யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் உதவி என்று இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். நம்மால் இயன்றதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். 

அதனால் பேருந்துக்கான பாஸ் கிடைக்கும் வரை நான் எனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்ல ஆரம்பித்தேன். எனது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றால் ஒரு மணி நேரம் ஆகும். தினமும் வர போக என இரண்டு மணி நேரம் நடந்து செல்வதற்கு செலவிட்டேன். நான் பள்ளிக்கு நடந்து செல்வதை கவனித்த ஒரு சில நண்பர்கள் என்னை நீ என்னுடன் வா என்று அழைத்தார்கள் ‌. ஒரு சில நண்பர்கள் நீ சரியான கஞ்சனாக இருக்கிறான் என்று கேலி செய்து பேசினார்கள். நான் யார் பேசுவதையும் காதில் வாங்காமல் நாம் நடந்தே சென்று விடலாம் என்று முடிவெடுத்தேன். 

நான் நடந்து செல்வதால் நாளுக்கு நாள் நீ நிறைய நண்பர்கள் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். என் குடும்ப சூழ்நிலையை என்னால் வெளியில் கூற முடியவில்லை. அதனால் நான் நடந்து செல்லும் போது ஏதாவது பேருந்து அல்லது என் நண்பர்கள் சைக்கிள் வந்தாலோ  மரத்திற்குப் பின்னால் அல்லது ஏதாவது வீட்டிற்கு பின்னால் சென்று ஒளிந்து கொள்வேன். 


அவர்கள் கடந்து சென்ற பின்னர்தான் நான் வெளியே வந்து நடந்து செல்வேன். இப்படியே 2 மாதங்கள் கடந்து விட்டது.

மேலும் நாட்கள் செல்ல செல்ல எனது பள்ளி சீருடை கிழிந்து விட்டது. நான் வேலைக்கு சென்ற பணத்தை வைத்து பள்ளியின் கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். சீருடை வாங்குவதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் நான் கிழிந்த சீருடை உடனே சென்றேன். நாளுக்கு நாள் சீருடை பெரிதாக இருந்தது. இதனைக் கவனித்த ஆசிரியர்கள் வீட்டில் கூறி வேறு புது சீருடை வாங்கி அணிந்து வருமாறு வற்புறுத்தினர். எனக்கு மீண்டும் வீட்டில் கேட்பதற்கு பயமாக இருந்தது. கிழிந்த சீருடை உடனே மூன்று மாதங்கள் சென்றேன். இதனால் நிறைய கேலி கிண்டலுக்கு ஆளானேன். யாரும் என் கிழிந்த உடையை பார்க்க கூடாது என்பதற்காக என் பேக்கை வைத்து மறைத்து செல்வேன் எப்பொழுதும்.


சிறிது நாள் கழித்து எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக என் அம்மாவிடம் எது கேட்டாலும் அடி விழுகும் அல்லது இதனால்தான் அளவுக்கு மீறி ஆசைப் படாதே என்று சொன்னேன் என்று சொல்லிடுவார். ஆனால் இந்த முறை நான் பள்ளிக்கு சென்ற நிலையை பார்த்த என் அம்மா எனக்கு தெரியாமல் என் பள்ளி சீருடையை வாங்கி அதை தைத்து எனக்கு இதை அணிந்து செல் என்று கொடுத்தார். என்னால் அதை நம்ப கூட முடியவில்லை. என் அம்மா திடீரென்று சீருடை வாங்கிக் கொடுத்தது எனக்கு உண்மையில் அதிர்ச்சி அளித்தது முற்றும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

என் பள்ளியில் அந்த வருடம் நான் பாதி பள்ளி கட்டணத்தை மட்டும் செலுத்தி இருந்தேன் மீதி செலுத்தாமல் இருந்தேன். மிருதி தேர்வு நெருங்கிய நிலையில் பாதி கட்டணம் செலுத்தாத அவர்களுக்கான Hall Tickets வழங்கப்படவில்லை. மீதி தொகையை செலுத்தினால் தான் Hall ticket வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்து விட்டது.  நான் வேலை செய்த இடத்தில் கொஞ்சம் சம்பளம் வரவேண்டியிரந்தது‌. சரி அதை வாங்கிய கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அங்குதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நான் வேலை செய்த இடத்தில் என் அப்பா சென்று முன்பணமாக பணம் வாங்கியிருக்கிறார் . அதனால் நான் வேலை செய்த இடத்தில் உன் அப்பா உன் பெயரைச் சொல்லி தான் பணம் வாங்கிச் சென்றார் அந்த பணம் கழிய நீ இன்னும் 30 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். 


ஒரு வாரங்கள் அப்படியே பள்ளி கட்டணத்தை கட்டாமல் பல காரணங்களை சொல்லி கழித்துக் கொண்டிருந்தேன். நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டது அதனால் என்னை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே ஐந்து நாட்கள் நிறுத்தி விட்டது . நான் எப்படியாவது என் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று ஓடிக் கொண்டிருந்த நிலையில் என் அப்பாவின் இந்த செயல் என்னை கோபத்தின் உச்சிக்கு செல்ல வைத்தது. நேராக வீட்டுக்கு சென்று என் அப்பாவிடம் சண்டையிட்டு மிகவும் காரசாரமாக பேசினேன். ஆனால் அவர் அதை துளி கூட கண்டுகொள்ளவில்லை. தேர்வுக்கான நாட்கள் நெருங்கி விட்டது என்னால் நிம்மதியாக உட்கார்ந்து படிக்க கூட முடியவில்லை. என் பள்ளியில் நான் மட்டுமே Hall ticket வாங்காமல் இருந்தேன். எப்படி நாம் தேர்வு எழுதப் போகிறோம் என்று பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன் ‌

Part 04 To be continued...... 

Comments