Posts

Showing posts from March, 2021

அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 02

Image
அந்த பணத்தை பாக்குறப்ப இந்த பணம் இருந்தா நம்மளால நமக்கு பிடிச்ச மாதிரி அந்த சைக்கிள் வாங்க முடியும்ல அப்படின்னு தோணிச்சு. ஆனா இந்த டைம் அந்த பணத்தை நாம  திருடக்கூடாது ஆனா நமக்கு இந்த பணம் வேணும் அப்படின்னு தோணிச்சு. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு ஒரு  பத்து நாளா யோசிச்சிட்டு இருந்தேன். அந்த பத்து நாள்ல நாம அந்த சைக்கிளை ஓட்டுனா  எப்படி இருக்கும்னு  கற்பனை பண்ணிப் பார்த்துட்டு இருந்தேன்.  அப்படி எல்லாம் யோசிக்கறப்ப  எப்படியாவது சைக்கிளை வாங்கணும் அப்படிங்கறது மட்டும்தான் மனசுல  ஓடுச்சு. அப்புறம் நிறைய பேர் கிட்ட இந்த சைக்கிள் எவ்ளோ காசு வரும்னு விசாரிச்சேன்.  எல்லோரும் 1500 ரூபாய்  கிட்ட வரும்னு சொன்னாங்க.  அதுக்கப்புறம் நாமலே அந்த காசு சேத்து வச்சு வாங்கலாம்னு முடிவு பண்ண. வழக்கம்போல் எங்க வீட்டுல செய்யுற வேலை எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு , எங்கள் தெருவில் உள்ள வீட்டிற்கும் சென்று வேலை செஞ்சேன்.  தினமும் பத்து ரூபாய் கிடைக்கும். அதுக்கு அப்புறம் எங்க தெருவில ஒருத்தவங்க வீடு கட்டினாங்க அங்க போய் கல்லு மண்ணு மரம...

அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 01

Image
என்னோட இந்த வாழ்க்கை பயண அனுபவத்தை நான் இங்கு பதிவு பண்ண முக்கிய காரணம், என்னைப்போல் பல கனவுகளை சுமந்து செல்லும் ஏதோ ஒரு சிலருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படலாம் அல்லது ஒரு சிலருக்கு பொழுதுபோக்காக கூட அமையலாம் அதனால் நான் இங்கு எனது வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்கிறேன். நான் கருவில் இருக்கும்போதே என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடங்கிவிட்டது போல.  நான் கருவில் இருக்கும் பொழுதே ஆண் குழந்தை என்று தெரிந்ததும் என் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  அதனால் அப்பொழுது கருவில் கலைத்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அப்படி நினைப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்  என் அப்பா, வீட்டின் மேல் சிறிது கூட அக்கறை இல்லாமல் செயல்பட கூடியவர் , ஊரெங்கும் கடன் வாங்கி அதில் நாட்களை கழிக்க கூடியவர். அதனால்‌ எங்கள் குடும்பம் தரக்குறைவான பேச்சுக்கு ஆளானது.  என் அப்பாவின் செயலால் என் அம்மா ஆண்களையே ஒட்டுமொத்தமாக வெறுத்து விட்டார். மேலும் கருவில் இருந்த நானும் ஆண் என்பதால் என்னையும் வெறுத்து கலைப்பதற்கு முடிவெடுத்தாள். ஆனால் என்னுடைய நல்ல நேரம் கலைக்கக்கூடிய காலத்தை நான் கடந்து வ...