Posts
அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 03
- Get link
- X
- Other Apps
வறுமையின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவித்த அந்த நொடிகள். வழக்கமாக நான் பள்ளிக்கு சைக்கிளில் தான் சென்று வருவேன். அனால் என் கெட்ட நேரம் போல என் சைக்கிள் பழுதாகி ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் அது பள்ளி திறந்த காலம் என்பதால் பேருந்து கான Pass கிடைக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். ஆனால் என்னிடம் அதற்கான காசு இல்லை. என் வீட்டில் கேட்க மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால் பள்ளி திறப்பதற்கு முன்பே எங்கள் வீட்டில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினர். இந்த தருணத்தில் நான் பேருந்திற்கு காசு கேட்டால் அது என் பள்ளி வாழ்க்கையை கெடுத்து விடும் என்று நன்றாகப் புரிந்தது. அதனால் நான் என் நண்பணிடம் சென்று நான் உன்னுடன் உன் சைக்கிளில் பள்ளிக்கு வருகிறேன் என்று கேட்டேன். அவனும் என்னை ஒரு வாரம் வரை அழைத்துச் சென்றான். ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளி முடிந்து அவனுடன் சைக்கிளில் செல்ல நான் அவனுக்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். எங்கேயும் அவனை காணவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் பள்ளியிலிருந்து அந்த சாலை வழியே செல்பவர் இடம் உதவி கேட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன...
அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 02
- Get link
- X
- Other Apps
அந்த பணத்தை பாக்குறப்ப இந்த பணம் இருந்தா நம்மளால நமக்கு பிடிச்ச மாதிரி அந்த சைக்கிள் வாங்க முடியும்ல அப்படின்னு தோணிச்சு. ஆனா இந்த டைம் அந்த பணத்தை நாம திருடக்கூடாது ஆனா நமக்கு இந்த பணம் வேணும் அப்படின்னு தோணிச்சு. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு ஒரு பத்து நாளா யோசிச்சிட்டு இருந்தேன். அந்த பத்து நாள்ல நாம அந்த சைக்கிளை ஓட்டுனா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்துட்டு இருந்தேன். அப்படி எல்லாம் யோசிக்கறப்ப எப்படியாவது சைக்கிளை வாங்கணும் அப்படிங்கறது மட்டும்தான் மனசுல ஓடுச்சு. அப்புறம் நிறைய பேர் கிட்ட இந்த சைக்கிள் எவ்ளோ காசு வரும்னு விசாரிச்சேன். எல்லோரும் 1500 ரூபாய் கிட்ட வரும்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் நாமலே அந்த காசு சேத்து வச்சு வாங்கலாம்னு முடிவு பண்ண. வழக்கம்போல் எங்க வீட்டுல செய்யுற வேலை எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு , எங்கள் தெருவில் உள்ள வீட்டிற்கும் சென்று வேலை செஞ்சேன். தினமும் பத்து ரூபாய் கிடைக்கும். அதுக்கு அப்புறம் எங்க தெருவில ஒருத்தவங்க வீடு கட்டினாங்க அங்க போய் கல்லு மண்ணு மரம...
அழகான என் வாழ்க்கை பயண நினைவுகள். Episode 01
- Get link
- X
- Other Apps
என்னோட இந்த வாழ்க்கை பயண அனுபவத்தை நான் இங்கு பதிவு பண்ண முக்கிய காரணம், என்னைப்போல் பல கனவுகளை சுமந்து செல்லும் ஏதோ ஒரு சிலருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படலாம் அல்லது ஒரு சிலருக்கு பொழுதுபோக்காக கூட அமையலாம் அதனால் நான் இங்கு எனது வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்கிறேன். நான் கருவில் இருக்கும்போதே என்னுடைய வாழ்க்கைப் பயணம் தொடங்கிவிட்டது போல. நான் கருவில் இருக்கும் பொழுதே ஆண் குழந்தை என்று தெரிந்ததும் என் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அப்பொழுது கருவில் கலைத்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அப்படி நினைப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் என் அப்பா, வீட்டின் மேல் சிறிது கூட அக்கறை இல்லாமல் செயல்பட கூடியவர் , ஊரெங்கும் கடன் வாங்கி அதில் நாட்களை கழிக்க கூடியவர். அதனால் எங்கள் குடும்பம் தரக்குறைவான பேச்சுக்கு ஆளானது. என் அப்பாவின் செயலால் என் அம்மா ஆண்களையே ஒட்டுமொத்தமாக வெறுத்து விட்டார். மேலும் கருவில் இருந்த நானும் ஆண் என்பதால் என்னையும் வெறுத்து கலைப்பதற்கு முடிவெடுத்தாள். ஆனால் என்னுடைய நல்ல நேரம் கலைக்கக்கூடிய காலத்தை நான் கடந்து வ...